உறுதிப்பூக்கள் 2005
மண்டபம் நிறைந்த மக்கள், உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சிகள், கரும்புலிகளின் நினைவோடு கலந்த ஒரு மாலைப்பொழுது.
கனடாவில் வாழ்ந்து வரும் நாடக கலைஞர்களால் எடுத்துவரப்பட்ட சிறந்த 5 நாடகங்கள்...
எளிமையாகவும், சிறப்பாகவும் அமைந்தன.
ஏதோ நல்லகாலமாக்கும்...ஒலி அமைப்பு சிறப்பாக அமைந்தது. வாழ்த்துக்கள்.
இனி - சமாதானத்துக்கு பிறகு நடந்தவற்றை சித்தரித்த நிகழ்வாக அமைந்தது...
அடுப்படி போர்க்களமாகின்றது - ஒரு பெண் கரும்புலிப் போராளி...அவளை பெத்தெடுத்த வீரத்தாய், அவளது பணியை தொடர்ந்து செய்ய செல்லும் சகோதரி என உணர்ச்சி பூர்வமாக அமைந்தது.
மனதோடு - வெளிநாடுகளில் வாழும் இளம் குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் படும் அநாவசியமான மன உளைச்சலை சித்தரித்தது. மிக இயல்பாக, சுவாரசியமாகவும் இருந்தது.
நுரை - நகைச்சுவையோடு தற்கால அரசியல் நிலவரங்களையும், சிங்கள கோமாளித்தனத்தையும் சித்தரித்தது.
வீட்டுக்கு வீடு - வெளிநாடுகளில் வாழும் தமிழனின் போக்கையும் அவனது அலட்சியத்தையும், எமது நாட்டின் தேவைகளையும் சுவாரசியமாகவும் நகைச்சுவையுடனும் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் அமைந்தது.
நடனங்களுடன் சில பேச்சுகளுடன் இனிதே நிறைந்தது அந்த மாலைபொழுது.
ஆமாம், நிகழ்ச்சி நிறைவடையும் பொழுது உறுதிப்பூக்களின் நினைவிலே நாமும் உறுதி எடுத்துக்கொண்டோம்.
தமிழனின் தாகம் தமிழீழதாயகம்!