காவலன்- G U A R D

எனது பார்வையில் நீங்கள் பார்த்தவையும் கேட்டவையும்

Monday, July 11, 2005

உறுதிப்பூக்கள் 2005

மண்டபம் நிறைந்த மக்கள், உணர்ச்சிபூர்வமான நிகழ்ச்சிகள், கரும்புலிகளின் நினைவோடு கலந்த ஒரு மாலைப்பொழுது.

கனடாவில் வாழ்ந்து வரும் நாடக கலைஞர்களால் எடுத்துவரப்பட்ட சிறந்த 5 நாடகங்கள்...
எளிமையாகவும், சிறப்பாகவும் அமைந்தன.

ஏதோ நல்லகாலமாக்கும்...ஒலி அமைப்பு சிறப்பாக அமைந்தது. வாழ்த்துக்கள்.

இனி - சமாதானத்துக்கு பிறகு நடந்தவற்றை சித்தரித்த நிகழ்வாக அமைந்தது...

அடுப்படி போர்க்களமாகின்றது - ஒரு பெண் கரும்புலிப் போராளி...அவளை பெத்தெடுத்த வீரத்தாய், அவளது பணியை தொடர்ந்து செய்ய செல்லும் சகோதரி என உணர்ச்சி பூர்வமாக அமைந்தது.

மனதோடு - வெளிநாடுகளில் வாழும் இளம் குடும்ப வாழ்க்கையில் ஒரு பெண் படும் அநாவசியமான மன உளைச்சலை சித்தரித்தது. மிக இயல்பாக, சுவாரசியமாகவும் இருந்தது.

நுரை - நகைச்சுவையோடு தற்கால அரசியல் நிலவரங்களையும், சிங்கள கோமாளித்தனத்தையும் சித்தரித்தது.

வீட்டுக்கு வீடு - வெளிநாடுகளில் வாழும் தமிழனின் போக்கையும் அவனது அலட்சியத்தையும், எமது நாட்டின் தேவைகளையும் சுவாரசியமாகவும் நகைச்சுவையுடனும் மக்களுக்கு சென்றடையும் வண்ணம் அமைந்தது.
நடனங்களுடன் சில பேச்சுகளுடன் இனிதே நிறைந்தது அந்த மாலைபொழுது.

ஆமாம், நிகழ்ச்சி நிறைவடையும் பொழுது உறுதிப்பூக்களின் நினைவிலே நாமும் உறுதி எடுத்துக்கொண்டோம்.

தமிழனின் தாகம் தமிழீழதாயகம்!

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Tuesday, July 05, 2005

கரும்புலி வீரன்

நெஞ்சம் கனக்குதையா
உன் பெயர் கேட்கையிலே

உனது வாழ்வு
உனக்கு வேண்டாமென்று

எமது வாழ்விற்க்காய்
நெடிப்பொளுதில் சென்றாயோ?

இன்றும், என்றும்
எட்டாத தூரத்திலிருந்து

எம் நினைவுகளில்
வாழ்வாயாக!

என்றென்றும் மலர்களுடன்
உன் கருவறையுள்...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

Sunday, July 03, 2005

கனடா தமிழ் மொழி வாரம்

கனடாவில், தமிழ் மொழிவார சிறப்பு நிகழ்ச்சிகளில் நடைபெற்ற இந்த கண்காட்சியை காணாதவர்களே, You Missed It!

நான் தொடர்ந்து 7 வருடங்களாக இந்த கண்காட்சிகளுக்கு சென்றுவருகிறேன்....ஆனால், இது போல் சிறப்புற எதுவுமே அமைந்ததில்லை...

இந்த மாணவர்களின் ஆக்கங்களை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சியும் பொறாமையும் அடைந்தேன்... அட... நாங்கள் என்ன செய்து கிழிச்சோமென்று...

விழா அமைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்...

ஆமாம், தமிழ் என்றும் அழிவதில்லை

இந்த நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வந்திருந்ந்த தமிழ் நாட்டை சேர்ந்த திரு.பாண்டியன் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்கள் பேசும் போது சொன்னார், தனக்கு கனடாவில் நிக்கின்றோமா தமிழ் நாட்டில் நிற்கின்றோமா என்று சந்தேகம் எழுவதாக.

தமிழர்களின் பண்டை வரலாற்றில் இருந்து, இலங்கை தமிழரின் இன்றைய நிலமை வரை சிறப்பாக எடுத்து காட்டப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தாலும்... ஒலிவாங்கிகள் சரியாக இயக்கபடாதமை கண்டிக்க தக்கது. ஏன் தான் நல்ல ஒலி அமைப்பாளர்கள் கிடைபதில்லையோ தெரியவில்லை.... கடந்த 7 வருடமாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.
Type your comments in Tamil தமிழில் பின்னூட்டம் அடிக்க