காவலன்- G U A R D

எனது பார்வையில் நீங்கள் பார்த்தவையும் கேட்டவையும்

Sunday, July 03, 2005

கனடா தமிழ் மொழி வாரம்

கனடாவில், தமிழ் மொழிவார சிறப்பு நிகழ்ச்சிகளில் நடைபெற்ற இந்த கண்காட்சியை காணாதவர்களே, You Missed It!

நான் தொடர்ந்து 7 வருடங்களாக இந்த கண்காட்சிகளுக்கு சென்றுவருகிறேன்....ஆனால், இது போல் சிறப்புற எதுவுமே அமைந்ததில்லை...

இந்த மாணவர்களின் ஆக்கங்களை பார்த்து நான் மிக்க மகிழ்ச்சியும் பொறாமையும் அடைந்தேன்... அட... நாங்கள் என்ன செய்து கிழிச்சோமென்று...

விழா அமைப்பாளர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எனது பாராட்டுக்கள்...

ஆமாம், தமிழ் என்றும் அழிவதில்லை

இந்த நிகழ்ச்சிக்கு பிரதம விருந்தினராக வந்திருந்ந்த தமிழ் நாட்டை சேர்ந்த திரு.பாண்டியன் (மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்) அவர்கள் பேசும் போது சொன்னார், தனக்கு கனடாவில் நிக்கின்றோமா தமிழ் நாட்டில் நிற்கின்றோமா என்று சந்தேகம் எழுவதாக.

தமிழர்களின் பண்டை வரலாற்றில் இருந்து, இலங்கை தமிழரின் இன்றைய நிலமை வரை சிறப்பாக எடுத்து காட்டப்பட்டன.

கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக இருந்தாலும்... ஒலிவாங்கிகள் சரியாக இயக்கபடாதமை கண்டிக்க தக்கது. ஏன் தான் நல்ல ஒலி அமைப்பாளர்கள் கிடைபதில்லையோ தெரியவில்லை.... கடந்த 7 வருடமாக இதில் எந்த முன்னேற்றமும் இல்லை...

Rate this post at www.thamizmanam.com Current rating is: Click on the stars for voting pad.

4 Comments:

At 10:20 AM, Blogger சினேகிதி said...

காவலன் ஏழு வருடங்களாகக் கண்காட்சிக்கு சென்றிருந்தும் எதுவும் செய்து கிளிக்கவில்லையா??நான் ஐந்து வருடங்களாகச் சென்று வருகிறேன். 2001 ல் நடைபெற்ற கண்காட்சியில் மருத நிலம் பற்றிச் செய்து கிளித்திருந்தோம் பார்த்தீர்களா?

 
At 10:24 AM, Blogger கிஸோக்கண்ணன் said...

நானும் அக்கண்காட்சிக்கு வந்திருந்தேன் காவலன். மாணவர்களில் உழைப்பு முன்மாதிரியானது. காட்சியில் வைத்த ஆக்கங்களை இனி என்ன செய்வார்கள் என்ற கேள்வி என்னிடமுள்ளது.

 
At 10:34 AM, Blogger காவலன் said...

சினேகிதி, கடந்த காளங்களில், சில காட்சிகள் நன்றாக தான் இருந்தன, அதை நான் குறை கூறவில்லை... உங்களது, மருத நிலம் கூட, (சொர்ர்ய்) சரியாக ஞாபகம் இல்லை...

இருந்தும், நான் சொல்ல வந்தது, கடந்த காளங்களில் கூடுதலான ஆக்கங்கள் கனடாவிற்க்கு புதிதாக வந்த மாணவர்களாள் ஆக்கப்பட்டவை, ஆனால், இந்தமுறை பல காட்ச்சிகள் இங்கு பிறந்த மாணவர்களால் ஆக்கப்பட்டவையாக இருந்தன... அதைத்தான் சொல்ல வந்தேன்.

ஆம் கிஸோ, அவர்கள் இதை பாதுகாப்பது அவசியம், வெறு கல்லூரி நிறுவனங்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கலாம், அல்லது ஏலத்தில் விட்டிருக்கலாம்

 
At 11:38 AM, Blogger சினேகிதி said...

பனைமரம் போன்றவற்றை தங்கள் வளாகங்களில் வைத்திருப்பார்கள் புல் போன்றவற்றை வீசி விடுவார்கள்

 

Post a Comment

<< Home

Type your comments in Tamil தமிழில் பின்னூட்டம் அடிக்க